நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட நிகழ்ச்சியில் காமெடி நடிகர் சூரி மற்றும் புகழ் இருவரும் மாறி மாறி ச ண்டை போட்டுக்கொண்டனர்.விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து இருந்தாலும்,குக் வித் கோமாளி மூலமாக பாப்புலர் ஆனவர் புகழ். அவர் தற்போது திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அவர் நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் சின்ன ரோலில் தோன்றி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து இருக்கிறார் அவர்.
சூர்யா அவர்களின் எதற்கும் துணிந்தவன் மார்ச் 10 அன்று வெளியாக இருக்கிறது. படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் சன் டிவி ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் சூர்யா தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.தனது பிஸி காரணமாக சூர்யா பங்கேற்கவில்லை போல தெரிகிறது.இயக்குனர் பாண்டிராஜ், ஹீரோயின் பிரியங்கா அருள்மோகன், சூரி, இமான், புகழ் என பலரும் கலந்துகொண்டனர்.
காமெடி நடிகர்கள் சூரி மற்றும் புகழ் இருவரும் சிறப்பு நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே மாறி மாறி தங்களை கலாய்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் சூரி புகழால் தனக்கு ஒன்றறை லட்சம் நஷ்டம் என கூறினார். என்ன ஆச்சு என எல்லோரும் ஷா க் உடன் கேட்டனர் என்னது ஒன்றரை லட்சமா??
சூரி ஒரு வெள்ளந்தி காமெடி நடிகர்,ஷூட்டிங் ஸ்பாட்டில் வீடியோ எடுக்கிறேன் என சொல்லி புகழ் செய்த விஷயாத்தால் தனது 1.5 லட்சம் ருபாய் மதிப்புள்ள போன் வீணாக போனது என கூறி உள்ளார்.சூரியின் போனை வைத்து தண்ணீருக்கு அடியில் வீடியோ எடுத்திருக்கின்றனர். அப்போது புகழின் போன் கைதவறி கீழே விழு, நீச்சல் குளத்தில் இருந்து அதை வெளியில் எடுக்க கஷ்டப்பட்டு இருக்கின்றனர். புகழின் போன் அப்போது வேலை செய்யாமல் போய்விட்டதாம், சூரியின் போன் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது ஆன் ஆகவில்லையாம்.
இந்த சம்பவத்தால் சூரிக்கு 1.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. புகழும் தனக்கு இதில் அதே அளவு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்து உள்ளார்.அதன் பிறகு ‘சும்மா சுர்ருனு பாட்டுக்கு டான்ஸ் ஆடும்போது, யார் டான்ஸ் சிறப்பாக இருக்கிறது என இருவருமே மாறி மாறி காமெடியாக ச ண்டை போட்டனர்.
காமெடி வேற level variety-ல இருக்க போகுது
Etharkkum Thunindhavan| Special Show#SunTV #EtharkkumThunindhavanSpecialShow #EtharkkumThunindhavanSpecialShowOnSunTV pic.twitter.com/4wSWJwzXCc
— Sun TV (@SunTV) March 8, 2022