செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு விரைவில் டும் டும் டும்..!! புகைப்படத்துடன் உறுதி செய்த மாப்பிள்ளை யார் தெரியுமா??

Cinema

செய்திவாசிப்பாளர் என்றாலே அழகாக தான் இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை அப்படி கண்மணி தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் மாலை முரசு, ஜெயா நியூஸ், நியூஸ் 18, காவேரி நியூஸ் போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார்.

முதலில் இவர் மாடலிங் துறையில் இருந்து வந்தாலும் தற்போது கண்மணி சேகர் சன் டிவியில் தன்னுடைய தனித்துவமான பேச்சாற்றலால் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். கண்மணி சன் நியூஸ் லைவ்விலும் பணியாற்றியுள்ளார். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளதால் இவரது செய்திகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நேரடியாக ஒரு பிரபலத்தை பேட்டி காணவேண்டும் என்றால் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே பயன்படுத்துவார்கள் அப்படி கண்மணி சேகர் பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டுவருவார். அந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும்.

அனைவருக்கும் காதல் வரும் அந்த வகையில் கண்மணி சேகர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இ தயத் தை தி ருடா தே தொடரில் சிவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீனை காதலித்து வருகிறார். இவர் நடித்த அந்த தொடரின் மூலம் நவீனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உண்டு.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.நவீன் மலையாளத்தில் மணிரத்னம் என்ற படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழில் மசாலா படம், பூலோகம், மா யவன், மிஸ்டர் லோக் கல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.தற்போது நவீன் மற்றும் கண்மணி இருவரும் காதலித்து வருவது அவர்கள் ரசிகர் மத்தியில் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *