பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் தான் பாகுபலி. ஒன்றன் தொடர்ச்சியாக இரண்டு பாகங்களாக வெளிவந்த இப்படம், பல நூறு கோடிகளை வசூல் செய்து இந்தியளவில் மாபெரும் சாதனை படைத்தது. வேறு எந்த படங்களும் செய்யாத பல சாதனைகளை இந்த படம் செய்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த படத்தின் மூலம் பிரபாஸ் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ராதேஷ்யாம். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் தற்போது ஒவ்வொரு ஊரிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாகுபலி படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் முதலில் வேறு ஒரு நடிகர் நடிகைகள் நடிக்க வேண்டி இருந்து பின்பு நாம் திரையில் பார்த்த நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் நடிகர் பிரபாஸிடம், பாகுபலி 3 வருமா என்று சாதாரணமாக ஒரு கேள்வி கேட்டுள்ளார்.இதற்கு பதிலளித்த பிரபாஸ் ” நானும் ராஜமவுலியும் எங்களது படங்களை பற்றி அடிக்கடி விவாதிப்போம். நிச்சயம் ஏதாவது ஒன்று நடக்கும். நானும் ராஜமவுலியும் பாகுபலியை விட்டு வி லகவி ல்லை. யாருக்கு தெரியும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் ” என்று கூறியுள்ளார்.ஒரு வேலை அது நடக்கலாம்.
இதன்முலம் விரைவில் பாகுபலி 3 வருவதற்கு பெரிதும் வாய்ப்புகள் உண்டு என தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. வெற்றி படம் வெற்றி கூட்டணி வந்தால் அருமையாக தான் இருக்கும்.