அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கப் போன எனக்கு இது தான் நடந்தது..!! மனம் திறந்த விஜய் டிவி சி ல்மி ஷம் சிவா..!!

Cinema

சின்னத்திரை தான் பலருக்கு அடுத்த படி செல்வதற்கு கதவை திறக்கும் அந்த வகையில் பிரபலமானவர் விஜய் டிவி சில்மிஷம் சிவா. இவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. நடிகர் அஜித் படம் என்றால் ரசிகர் கூட்டம் களைகட்டும்.நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து, இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வெளிவந்த “வலிமை” படம் கோடிகளில் வசூலை குவித்து வருகிறது.சிறந்த வக்கீலாக அஜித் அவர்கள் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இரண்டு படங்களையும் போனிகபூரே தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி தொகுப்பாளர், பாடலாசிரியர் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், சதீஷ், புகழ் என தமிழ் சினிமாவில் நடிகராக, நகைச்சுவை கலைஞர்களாக உலா வரும் பலரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வரிசையில் தற்போது கலக்க போவது யாரு சீசன் 9ல் கலந்து கொண்ட சில்மிஷம் சிவாவும் சேர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படத்தில் சில்மிஷம் சிவாவும் நடித்துள்ளார்.

பல கீழ்த்தட்டு நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பல நடிகர்கள் முக்கிய கதாபா த்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் நடித்து இருந்தார். அந்த வகையில் இந்த படத்தில் விஜய் டிவி சில்மிஷம் சிவாவும் நடித்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 9 போட்டியாளராக கலந்து கொண்டவர் சில்மிஷம் சிவா. இவர் இதற்குப் பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று இருந்தார்.

தனது முதல் படமே நடிகர் அஜித்துடன் என்பது அவரது முன்னேற்றத்திற்கு பெரும் துணையாக இருக்கும். அஜித்துடன் ஆரம்பத்திலேயே இவரை பார்க்கலாம். இவர் வரும் காட்சிகளில் தியேட்டர்களில் கைதட்டல்கள் ஒலித்தது. ஒரு நல்ல காமெடி நடிகராக நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இவரின் பா டி லா ங்குவே ஜில் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார். படத்தில் இவருடைய சொந்த ஊரான சில்மி ஷம் சிவா என்ற பெயருடன் இவர் திரையில் தோன்றியிருக்கிறார். இந்நிலையில் இது குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்த சில்மி ஷம் சிவா கூறியிருப்பது,

இரண்டும் ஒரே தேதி நான் சற்றே கலக்கத்தோடு இருந்தேன் ஏன் என்றால் கலக்கப்போவது யாரு 9 பைனல்ஸ் முடிவதற்கு முன்பே எனக்கு அஜித் சார் உடைய படத்தில் வாய்ப்பு கிடைத்து விட்டது. ஆனால், அப்ப எனக்கு அஜித் சார் படம்ன்னு தெரியாது. வினோத் சார் படம் மட்டும் தான் தெரியும். அதனால் ஓகே சொன்னேன். என்னுடைய காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஷூட்டிங் நடந்த தேதி கலக்கப்போவது யாரு 9 ஃபைனல்ஸ் நடந்த அதே தேதியில் நடந்தது. காலையில் 4 மணிக்கு ஷூட்டிங் முடித்துவிட்டு 6 மணிக்கு பிளைட் பிடித்து ஏர்போர்ட்டில் எப்படி போவது என்று எனக்கு தெரியாது. படக்குழு தான் டிக்கெட் போட்டு என்னை நல்லபடியாக அங்கு அனுப்பி இருந்தார்கள்.

ரசிகர் தான் என்னை கவனித்து அணைத்து சொல்லிக்கொடுத்து என்னை புறப்பட வைத்தார் பிளைட் ஏற்றிவைத்தார். முதல் அறிமுகம் வானில் பரந்த அனுபவம்.ஹைதராபாத் போனதும் வினோத் சார் என்னை அஜித் சார்கிட்ட அறிமுகம் செய்து வைத்தார். அவ்ளோ பெரிய நடிகர் அவர் உடனே வந்து என்னைக் கை கொடுத்து ஹலோ சிவா என்று சொன்னார். அங்கேயே தல எல்லாம் சு த்தி சந்தோஷத்தில் திக்குமு க்காடி போனேன். பின் அன்னைக்கு சூட்டிங் முடிந்து ஹோட்டலுக்கு போனேன்.அதுக்கு அப்பறம் தான் சிரமமே இருந்தது.

எனக்கு மொழி தெரியாததால் நான் சொல்வது ஹோட்டல் நிர்வாகிகளுக்கு புரியவில்லை. உடனே அவர்கள் என்னை இங்க நிக்க கூடாது என்று என்னை அனுப்பி வைத்துவிட்டார்கள்.என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையில் போன் இல்லை, பணம் இல்லை. எல்லாமே கேரவனில் இருந்தது. ரோட்டில் பிச்சைக்காரன் மாதிரி 3 மணி நேரம் சுற்றிக் கொண்டே இருந்தேன். கடைசியில் படத்தின் மேக்கப் கலைஞர்கள் என்னை பார்த்து கவனித்து பின் மறுபடியும் ஹோட்டல் ரூமுக்கு அழைத்துப் போய் தங்க வைத்தார்கள். முதல் படத்திலேயே எனக்கு இவ்வளவு அனுபவங்கள் கிடைத்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்று சில்மி ஷம் சிவா வலிமை படத்தின் அனுபவத்தை பகிர்ந்து இருந்தார் அவருக்கு நன்றி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *